கிழக்கு ஆளுனர் மருத்துவ சங்க பிரதிநிதிகள் பேச்சு

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகரவுக்கும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கும்  (GMOA)  இடையிலான கலந்துரையாடல் நேற்று புதன்கிழமை திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

வைத்தியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆளுநரிடம் தெரிவிக்கப்பட்டதுடன் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஆளுநர் இதன் போது கூறினார்.

கிழக்கு மாகாண பிரதம செயலாளர் திரு. டி. ஏ. சி. என். தலங்கம, ஆளுநர் செயலக செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ்,  கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எச்.இ.எம்.டபிள்யூ.ஜி. திசாநாயக்க, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.ஜி.எம். கொஸ்டா மற்றும் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

கிழக்கு ஆளுனர் மருத்துவ சங்க பிரதிநிதிகள் பேச்சு

 

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24