கிழக்கு ஆளுநர் – தேசிய பாதுகாப்பு கல்லூரி பாதுகாப்பு அதிகாரிகள் குழு சந்திப்பு

-மூதூர் நிருபர்-

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகரவுக்கும், தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பயிற்சி பெறும் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

பாதுகாப்பு அதிகாரிகள் தங்கள் கற்கைக் காலத்தில் திருகோணமலை மாவட்டத்திற்கு மேற்கொண்ட களப்பயணத்தின் போது ஆளுநருடன் ஒரு சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இதன்போது, கிழக்கு மாகாணத்தில் நிலவும் சமூக மற்றும் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆளுநர் பார்வையாளர்களுக்கு விளக்கமளித்ததுடன், மாகாணத்தில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் பாதுகாப்புத் துறை எந்த அளவிற்கு தலையிட வேண்டும் என்பது குறித்து தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க