
கிழக்கு ஆளுநரிடம் தாதியர் சங்கம் சந்திப்பு
-மூதூர் நிருபர்
கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகரவுக்கும் அகில இலங்கை தாதியர் சேவைகள் சங்கத்திற்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று புதன்கிழமை திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி. ஏ. சி. என். தலங்கம, ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ், மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர். டி.ஜி.எம். கொஸ்டா மற்றும் அதிகாரிகள் குழு கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில், கிழக்கு மாகாணத்தில் பணியாற்றும் தாதியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தாதியர் சேவைகள் சங்கம் கிழக்கு ஆளுநரிடம் முன்வைத்தது, மேலும் இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான உடன்பாடு எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.