கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 15 மாணவர்கள் சி.ஐ.டியினரால் கைது!

கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் பயிலும் 6 மாணவிகளும், 9 மாணவர்களும் நேற்று புதன்கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொழில்நுட்ப பீடத்தின் 2021/2022 கல்வியாண்டில் பயிலும் மாணவிகள் குழுவை வாய்மொழியாகப் பேசி அச்சுறுத்தியதற்காக இந்த 15 மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாணவிகள் பண்டாரவளை, அதுருகிரிய, அட்டம்பிட்டிய, கோட்டே, கலமுன மற்றும் லுனுகம்வெஹெர ஆகிய பகுதிகளில் வசிப்பதாகவும், மாணவர்கள் அலஹெனேகம, கந்தளாய், கம்பளை, வதுருகம, அகுருவதொட்ட, மீவனபலான, பன்னிபிட்டிய, ஹுகஸ்தலாவ மற்றும் பண்டாரகம ஆகிய பகுதிகளில் வசிப்பதாகவும் குற்றப் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.