கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் தேர்தல் காரியாலயம் தன்னாமுனையில் திறப்பு

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பு சார்பில் ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தன்னாமுனை வட்டாரத்திற்கான தேர்தல் பரப்புரை காரியாலயமானது தன்னாமுனை பிரதான வீதியில் வேட்பாளர் லியோ ஜெகராசா நிராஜ் எல்மோ தலைமையில் நேற்று புதன் கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், முற்போக்கு தமிழர் கழகத்தின் செயலாளர் யோகநாதன் றொஸ்மன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு தேர்தல் பரப்புரை காரியாலயத்தினை திறந்து வைத்தனர்.

நிகழ்வில் தன்னாமுனை வட்டார மேலதிக வேட்பாளர் யூட்ஸ் ஹம்ஸத்வனி அவர்கள் பங்குபற்றிய இருந்ததுடன், கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள், கிராம மட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க