கிழக்கில் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை
கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு அக்டோபர் 20 ஆம் திகதி எதிர் வரும் தீபாவளியை முன்னிட்டு, தமிழ் பாடசாலைகளுக்கு மறு நாள் அக்டோபர் 21 விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளதுடன் இதனை கிழக்கு மாகாண ஆளுனரின் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
இது குறித்து இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட கடிதம் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் படி பதில் பாடசாலை அக்டோபர் 25 சனிக் கிழமை இடம் பெறும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
