கிழக்கின் புதிய ஆளுநரை நேரில் சென்று வாழ்த்திய ஹரீஸ் எம்.பி

கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மாகாண அமைச்சருமான செந்தில் தொண்டமானை திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சிநேகபூர்வமாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அமைச்சருமான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் பற்றியும், மலையக மக்கள் பற்றியும் பேசிக்கொண்டதாக சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

மேலும், இளம் தலைவரான எனது நீண்டகால நண்பர் செந்தில் தொண்டமானை மலையக மக்கள் மட்டுமின்றி கிழக்கு மாகாணத்தில் வாழுகின்ற மக்களும் வாழ்த்துவதுடன் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் மத்தியில் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் ஏற்படுத்தி கிழக்கு மாகாணம் சிறந்து விளங்க அவர் பயணிக்க வேண்டிய நேரிய பாதைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்