கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தின் கீழ் காத்தான்குடி கடற்கரை சிரமதானம்!

 

“ஒரு செழிப்பான தேசம் – அழகான வாழ்க்கை” என்ற கிளீன் ஸ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், காத்தான்குடி கடற்கரை முன்றலில் சிரமதான நடவடிக்கை இன்று செவ்வாய்க்கிழமை காலை சிறப்பாக இடம்பெற்றது.

இந்தச் சிரமதான நிகழ்வு, காத்தான்குடி நகர சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

சிரமதானத்தின் போது கடற்கரைப் பகுதியில் காணப்பட்ட கழிவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு, அதனுடன் தொடர்புடைய முறையான அகற்றும் நடவடிக்கைகள் நகர சபையின் மூலம் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மக்கள் விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்றது.

மேற்படி இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபை பிரதித் தவிசாளர் எம்.ஐ.எம். ஜெஸீம் மற்றும் நகர சபை உறுப்பினர்கள், நகர சபை நிருவாக உத்தியோகத்தர், நகர சபை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு படையினர், காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பு உறுப்பினர்கள், சமூர்த்தி பயனாளிகள் உள்ளிட்ட பலரும் செயற்பாடுகளில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.