
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தை முன்னெடுத்த முப்படையினர்
புதிய அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத் திட்டத்தின் கீழ் திருகோணமலை கடற்கரை பகுதி இன்று வெள்ளிக்கிழமை சுத்தம் செய்யப்பட்டது.
குறித்த திட்டத்தினை திருகோணமலை நகரசபை மற்றும் முப்படையினர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன் போது திருகோணமலை கடற்கரை மற்றும் அதனை அண்மித்த பகுதியில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.
குறித்த நிகழ்வில் திருகோணமலை நகரச சபை ஊழியர்கள், முப்படையினர் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
