“கிளீன் வாழைச்சேனை” எனும் தொனிப்பொருளில் சூழல்நேயச் சிரமதானம்
-கிரான் நிருபர் –
மட்டக்களப்பு வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுற்று புறச்சூழல் சுத்தம் தொடர்பான செயற்பாடு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
“கிளீன் வாழைச்சேனை” எனும் தொனிப்பொருளில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
பாதையின் இரு பக்கங்களில் உள்ள வியாபார நிலையங்கள் மற்றும் அலுவலக வளாகங்களில் இருந்து அகற்றப்படும், குப்பைகள், கழிவுகள் ஆங்காங்கே வீதியில் வீசி விடாமல், முறையாக அவற்றை சேகரித்து, பிரதேச சபை வாகனங்களிடம் ஒப்படைக்குமாறு, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் அறிவிக்கப்பட்டது .
வாழைச்சேனை பொலிஸ் நிலைய சந்தி தொடக்கம், கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை வரைக்கும், இச் சூழல்நேயச் சிரமதானம் இடம்பெற்றது
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி திருமதி பாமினி அச்சுதன் தலைமையில், அலுவலக ஊழியர்கள் மற்றும் மாணவர்கள், தொண்டர்கள் இச் சூழல்நேயச் சிரமதானத்தில் ஈடுபட்டிருந்தனர்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்