
கிளிநொச்சி விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்
-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சி மாவட்ட விவசாய திணைக்களத்தின் இரணைமடு விவசாய விரிவாக்கல் அலுவலகத்திற்கு முன்னால், இன்று அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டித்தும், அரச பணியாளர்களின் சம்பளத்தினை உடன் வழங்கவேண்டும், விவசாயிகளுக்கு மண்ணென்ணை வழங்கப்பட வேண்டும், விவசாய செய்கைக்கான இராசாயன உரத்தினை’வழங்க வேண்டும் , கிருமிநாசினி வழங்கப்பட வேண்டும், என பல விடயங்களை முன்வைத்தும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.


