கிளிநொச்சி மாவட்டத்தில் 8 டிப்பர்கள் பறிமுதல்

கடந்த 24 மணி நேர வீதிச் சோதனையின் மூலம், கிளிநொச்சி மாவட்டத்தில் 8 டிப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஆணையிறவு, பரந்தன், முருகண்டி ஆகிய பகுதிகளில், இரவு நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட வீதி சோதனையின் மூலம், எட்டு டிப்பர்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த டிப்பர்கள், அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றி பயணித்த குற்றச்சாட்டு மற்றும் அனுமதிப்பத்திரம் இன்றி மணலை வெளி மாவட்டத்திற்கு கொண்டு செல்ல முற்பட்ட குற்றச்சாட்டுக்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட 8 டிப்பர்களையும், இன்று சனிக்கிழமை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.