
கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கான மற்றும் திறந்த பிரிவு சதுரங்க போட்டி
-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சி மாவட்ட சதுரங்க சங்கத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட சதுரங்கப்போட்டி கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் இன்று சனிக்கிழமை ஆரம்பமாகியுள்ளது.
குறித்த போட்டி நாளையும் நடைபெறவுள்ளது. 07,09,11,12,15,17வயது பாடசாலை மாணவர்களுக்கும் 17வயதிற்கு மேற்பட்டோருக்கான திறந்த போட்டியும் நடைபெறுகின்றது.
கிளிநொச்சி மாவட்ட சதுரங்கச் சங்க தலைவர் திருநாவுக்கரசு சிவரூபன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக செல்வி. கிருஸ்ணபிள்ளை பிரதீபா பிரதிக் கல்விப் பணிப்பாளர் (உடற்கல்வி) வலயக்கல்வி அலுவலகம் – கிளிநொச்சி வடக்கு, சிறப்பு விருந்தினர்களாக திரு. சுப்பிரமணியம் தர்மரட்ணம் கோட்டக் கல்விப் பணிப்பாளர் – கரைச்சி வலயக்கல்வி அலுவலகம் – கிளிநொச்சி தெற்கு, திருமதி. இளவேந்தி நிர்மலராஜ் அதிபர் கிளி/கிளிநொச்சி மகா வித்தியாலயம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
