கிளிநொச்சி மகளீர் கல்லுாரி ஆசிரியை குழந்தைப் பேறின் போது மரணம்

கிளிநொச்சியில் இன்று புதன் கிழமை குழந்தைப் பேறின் போது ஒருவர் உயிர் இழந்துள்ளார்.

யாழ் மானிப்பாயைச் சேர்ந்த புனித திரேசா பெண்கள் கல்லூரியில் உயிரியல் பாட ஆசிரியராக கல்வி கற்பிக்கும் கிருஸ்ரினா டிலோ கண்ணகுமார் என்ற ஆசிரியரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.

இவரது உடல் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் நாளை அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அண்மை காலமாக நாட்டில் கர்பிணி தாய்மார்களின் உயிர் இழப்புக்கள் அதிகரித்து செல்வதை அவதானிக்க முடிகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்