கிளிநொச்சி பிரமந்தனாறு மகாவித்தியாலயத்தில் உயர்தரத்தில் கணித விஞ்ஞான பிரிவுகள் ஆரம்பம்

கிளிநொச்சி பிரமந்தனாறு மகாவித்தியாலயத்தில் உயர்தரத்தில் கணித விஞ்ஞான பிரிவுகள் ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது.

இவ் ஆரம்ப நிகழ்வானது பாடசாலை மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் பெ. பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, முதன்மை விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் திரு.சு. முரளிதரன், கிளிநொச்சி வடக்கு வலயக்கல்விப் பணிப்பாளர் க.அ.சிவனருள்ராஜா, கண்டாவளை பிரதேச செயலாளர் திரு கி.பிருந்தாகரன், கௌரவ விருந்தினர்களாக கண்டாவளை கோட்டக்கல்விப் பணிப்பாளர் இராசரஞ்சிதம் இரவீந்திரநாதன், கல்லாறு தமிழ் வித்தியாலய அதிபர் இ.கஜமுகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விடயம் தொடர்பில்,

“நீண்ட காலமாக இப்பகுதியில் வாழும் மாணவர்கள் உயர்தரத்தில் கணித விஞ்ஞான பிரிவுகளில் கற்பதற்கு வேறு பாடசாலைகளை தேடி சென்று சிரமப்படும் நிலை இருந்து வந்தது.

இந்நிலையில் தற்பொழுது பாடசாலையிலே உயர்தரத்தில் கணித விஞ்ஞான கற்களை கற்கக்கூடிய வகையில் தரம் உயர்த்தப்பட்டது மிகவும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளதாக, மாணவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்