கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் கோரவிபத்து இரு இளைஞர்கள் உயிரிழப்பு -வீடியோ இணைப்பு
பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியின் தர்மபுரம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
கிரேண்டர் வாகனத்தின் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் , சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் ஜரின் கனிஸ்ரன் (வயது -19) தியாகராசா விக்கினேஸ்வரன் (வயது-18) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் தொடர்பாக தர்மபுர பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த இரு இளைஞர்களின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக, கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர பொலிசார் தெரிவித்துள்ளனர்.
https://www.youtube.com/watch?v=r0TCYmZwfko







