கிளிநொச்சி கோணாவில் பகுதியில் நெல் அறுவடை விழா

-கிளிநொச்சி நிருபர்-

விவசாயிகள் மத்தியில் நவீன விவசாய தொழில்நுட்பங்களை வழங்கி நெல் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் காலநிலைக்கு சீரமைவான விவசாயத்திட்டத்தின் தொழில்நுட்ப உதவியுடன் மாவட்ட விவசாயத்திணைக்களத்தின் ஆலோசணைக்கு அமைய நாற்று நடும் இயந்திரம் மூலம் AT362நெல் வர்க்கம் நெற்ச்செய்கை மேற்கொள்ளப்பட்ட வயலில் நெல் அறுவடை விழா கிளிநொச்சி கோணாவில் பகுதியில் இன்று காலை 9.00மணிக்கு நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் வி.சோதிலட்சுமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் காலநிலைக்கு சீரமைவான விவசாயத்திட்டத்தின் பணிப்பாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன ,வடமாகாண விவசாய மேலதிக பணிப்பாளர் த.யோகேஸ்வரன், காலநிலைக்கு சீரமைவான விவசாயத்திட்டத்தின் வடமாகாண பணிப்பாளர் ஏ.சி.பாபு, யாழ் பல்கலைக்கழக விவசாய பீட பண்ணை முகாமையாளர், ,விவசாயத்திணைக்கள உத்தியோகத்தர்கள், காலநிலைக்கு சீரமைவான விவசாயத்திட்டத்தின் உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்பு பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.