கிளிநொச்சியில் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்வு
கிளிநொச்சி ஆணை விழுந்தான் பகுதியில் அமைந்துள்ள ஹேப்பி பேமிலிஸ் சிறுவர் அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றக்கிழமை நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஆனை விழுந்தான் பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாகவும் மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் அரச அதிகாரிகள் மற்றும் பொலிசார் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர் இதன்போது தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள அதிகளவான போதைப்பொருள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக விழிப்புணர்வு தெரு வழி அபிநய நிகழ்வும் நடைபெற்றது.
அத்துடன் சிறுவர்கள் பதாகைகளை ஏந்தியவாறு எம்மை நிம்மதியாக வாழவிடுங்கள் போதைப்பொருள் அற்ற சமுதாயத்தை உருவாக்குங்கள் இதன் போது சிறுவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பெற்றோர்களுக்கு போதைப்பொருள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வு கருத்துக்கள் வழங்கப்பட்டது.



