
கிளிநொச்சியில் விபத்து – இருவர் பலி
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கிளிநொச்சி தருமபுரம் பகுதியை சேர்ந்த இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்
தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பஸ் , கனரக டிப்பர் வாகனம் , மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார்
முன்னெடுத்துள்ளனர்.
