கிளிநொச்சியில் வாக்காளர் அட்டை விநியோகம்

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் 2025ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத்தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகிக்கும் பணியில் தபால் ஊழியர்கள் இன்று முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் திணைக்களத்தினால் நேற்று புதன் கிழமை உத்தியோகபூர்வமாக அஞ்சல் திணைக்களத்திடம் வாக்காளர் அட்டைகள் கையளிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று வியாழக்கிழமை வீடு வீடாக சென்று தபால் ஊழியர்கள் அவற்றை விநியோகித்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க