கிளிநொச்சியில் வன விலங்குகள் பற்றிய தேசிய கணக்கெடுப்புக்கான விண்ணப்பங்கள் வழங்கி வைப்பு

-கிளிநொச்சி நிருபர்-

விவசாயப்பயிர்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும் வன விலங்குகள் தொடர்பான தேசிய கணக்கெடுப்பு விவசாய மற்றும் கால்நடைவளம் நிலம் நீர்ப்பாசன அமைச்சினால் எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி காலை 8 மணி முதல் 8.05 மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கிராம சேவையாளர்கள் மூலம் பயிர்நிலங்கள் இவழிபாட்டு தலங்கள், பாடசாலைகள் பொது இடங்களில் குறித்த தினத்தில் கணக்கெடுப்பதற்காக படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.