கிளிநொச்சியில் புதையல்?

கிளிநொச்சி திருநகர் பகுதியில் தனியார் காணி ஒன்றில் புதையல் இருப்பதாக கூறி நேற்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றின் அனுமதியுடன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

இரண்டு கனரக இயந்திரங்கள் மூலம் 17 அடிவரை அகழ்வு நடைபெற்ற போதிலும், எந்தவித தடயங்களும் கிடைக்காத நிலையில் பணி இடைநிறுத்தப்பட்து. இதன் தொடர்ச்சியான பணி நாளை 9.00 மணியளவில் மீண்டும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகழ்வுப் பணியின் போது தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், கிராம சேவையாளர் பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினர் முன்னிலையில் இருந்தனர்.