கிளிநொச்சியில் நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

கிளிநொச்சி – வட்டக்கச்சி கட்சன் வீதி பகுதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் நபர் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த துப்பாக்கி தொடர்பில் பொதுமக்கள் வழங்கிய தகவலை அடுத்து சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, நாட்டுத் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த நபரையும் சான்றுப் பொருளையையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்