
கிளிநொச்சியில் சட்டவிரோத கடல் அட்டை வேட்டை: 13 பேர் கடற்படையிடம் சிக்கினர்!
கிளிநொச்சி, வளைப்பாடு கடல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரவு நேரத்தில் சுழியோடி கடல் அட்டைகளைச் சேகரித்த 13 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
வடமத்திய கடற்படைக் கட்டளைக்குச் சொந்தமான ‘SLNS புவனேக’ கப்பல் பிரிவினர் நேற்று திங்கட்கிழமை முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட 13 நபர்களும் மன்னார், பள்ளிமுனை, தோட்டவெளி, சவுத்பார் மற்றும் எழுத்தூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களின் வயது 29 முதல் 67 வரை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட மீன்பிடிப் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் கடல் வளங்களைப் பாதுகாக்கவும், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்கவும் கடற்படையினர் தொடர்ச்சியாக இவ்வாறான கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
