கிளிநொச்சியில் சடலம் மீட்பு

-கிளிநொச்சி நிருபர்-

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பரந்தன்  பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு 10 மணியளவில் இரத்தகாயங்களுடன் ஒருவர் சடலமாக மீடகப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் பரந்தன் ஒன்பதாம் வீதியை சேர்ந்த இதயராஜ் (வயது-45) என இனங்காணப்பட்டுள்ளார்.

சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது ,இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.