கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருவையாறு பகுதியில் இன்று புதன்கிழமை நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி பகுதியில் இருந்து திருவையாறு பகுதியை நோக்கி பயணித்த டிப்பர் திருவையாறு பகுதியில் வீடிடான்றிற்கு முன்னால் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் மேல் அமர்ந்திருந்தவரை மோதி தள்ளியதில் மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்த நபர் சம்பவ இட்திலேயே உயிரிழந்துள்ளார்.
திருவையாறு வின்சன்ட் விதி பகுதியைச் சேர்ந்த செல்வராசா ஷோபனாத் (வயது 35) என்ற இளம் குடும்பஸ்தரே இதன்போது சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்
விபத்தை ஏற்படுத்திய டிப்பர் வாகனத்தின் சாரதி கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது
இச்சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்


