கிருலப்பனை வீட்டுத்திட்டம் மீண்டும் ஆரம்பம்
கிருலப்பனை, கொலம்பகே மாவத்தையில் 2022 பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த 615 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டத்தை, புதிய ஒப்பந்த நடைமுறை ஊடாக மீண்டும் ஆரம்பித்து நிறைவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எஞ்சியுள்ள கட்டுமானப் பணிகளை முடித்து, திட்டத்தை முழுமையாகப் பூர்த்தி செய்ய மேலதிகமாக 6 பில்லியன் ரூபாய் தேவைப்படும் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
இதேநேரம் நேற்று (02) நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் அதிகாரிகள் குறித்த இடத்துக்கு நேரில் சென்று கட்டுமானப் பணிகளின் தற்போதைய நிலைமையை ஆய்வு செய்தனர்.
