
கிரீன்லாந்தை கைப்பற்ற துடிக்கும் ட்ரம்ப்: டென்மார்க் பிரதமர் எச்சரிக்கை!
கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க டொனால்ட் ட்ரம்ப் ஆர்வம் காட்டி வரும் நிலையில், டென்மார்க் அதற்குப் பலத்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
கிரீன்லாந்திலுள்ள அபரிமிதமான கனிம வளங்களைக் கருத்தில் கொண்டும், சீனாவுக்குப் போட்டியாகவும் அந்தப் பகுதியை விலைக்கு வாங்க அல்லது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ட்ரம்ப் விரும்புவதுடன், அங்கு தனியாக ஒரு தூதரையும் நியமித்துள்ளார்.
கிரீன்லாந்தை வலுக்கட்டாயமாக கைப்பற்ற அமெரிக்கா முயன்றால், அது கடந்த 80 ஆண்டுகளாக நிலவும் NATO பாதுகாப்பு உறவுகளை முற்றாகச் சிதைத்துவிடும் என டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் எச்சரித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் டென்மார்க்கிற்குப் பின்னால் உறுதியாக நிற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளா
