கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொல்லப்பட்ட இளைஞன்!

இரத்மலானை பகுதியில் இரு குடும்பங்களுக்கு இடையிலான மோதலில், கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தர்மாராம வீதி புகையிரத பாதைக்கு அருகில் வசிக்கும் இரு குடும்பங்களுக்கு இடையே நேற்று வெள்ளிக்கிழமை மோதல் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஒரு தரப்பினர் கிரிக்கெட் மட்டை மற்றும் விக்கெட் தடிகளால் அந்த இளைஞனை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த இளைஞன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், நான்கு பெண்கள் மற்றும் இரு ஆண்கள் என மொத்தம் 6 பேரைக் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞன் அதே பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.