கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் மொஹமட் மஹ்முதுல்லா அறிவித்துள்ளார்.

தமது ஓய்வு குறித்த அறிவிப்பை சமூக வலைத்தளங்களில் அவர் பகிர்ந்துள்ளார்.

39 வயதான அவர், 2021ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் 2024ஆம் ஆண்டு இருபதுக்கு 20 போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றார்.

தமக்கு இதுவரையில் ஒத்துழைப்பு வழங்கிய சக வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள், எப்போதும் ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையில் 239 ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள மொஹமட் மஹ்முதுல்லா 2,914 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.