
கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் சுனில் பெர்னாண்டோ காலமானார்
கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் சுனில் பெர்னாண்டோ காலமானார்.
நாட்டில் இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் உழைத்தவர் சுனில் பெர்னாண்டோ
இலங்கையின் கிரிக்கெட் வட்டாரங்களில் சுனில் பெர்னாண்டோ மிகவும் சிறப்பான ஒரு வழிகாட்டியாக மதிக்கப்பட்டவர் ஆவார்.
அவர் இலங்கை அணியின் சுழற்பந்து வீரரான முத்தையா முரளிதரன் உட்பட தேசிய கிரிக்கெட் அணியின் பல வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கையை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


