கிராம மட்ட அமைப்புகளுக்கான பயிற்சிப்பட்டறை
மொறவெவ – பிரதேசசபை மண்டபத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை பாரம்பரிய கிராம மட்ட அமைப்புக்களை பலப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மனித உரிமை மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்டங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தும் நான்காவது பயிற்சிப்பட்டறை இடம்பெற்றது.
இந்த பயிற்சிப் பட்டறையில் மொறவெவ பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் ஏஎச்ஆர்சி நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் மற்றும் சக ஊழியர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
இந்நிகழ்வில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் இசைடீன் வளவாளராக கலந்து கொண்டு மனித உரிமைகள் தொடர்பாக விளக்கமளித்தார்.