கிராமிய வீதிகள் செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிப்பு

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அவசியமான வீதிகள் இனம் கண்டு அவற்றை செப்பனிட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவில் 1.3கிலோமீற்றர் நீளமான களுவன்கேணி பாடசாலை வீதி காபெட் வீதியாகவும், 160மீற்றர் நீளமான வந்தாறுமூலை உள்ளக வீதி கொங்கிறீட் வீதியாகவும் செப்பனிட்டு மக்கள் பாவனைக்காக இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் கையளிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வுகளில் களுவன்கேணி ஸ்ரீ முருகன் ஆலய பிரதமகுரு நிமல்ராஜ் சர்மா, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிறைவேற்று பொறியியலாளர் எந்திரி ஏ.லிங்கேஸ்வரன், களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலய அதிபர் விராத்தனன், கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் இணைப்புச் செயலாளர் ஆ.தேவராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலக உத்தியோகத்தர் திருநாவுக்கரசு, ஏறாவூர் பற்று முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கோணேஸ்வரன் கிராம மட்ட பிரதிநிதிகள் உட்பட வீதி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.