
கிராமசேவை போட்டிப்பரீட்சை : நிந்தவூரிலிருந்து 14 பேர் தெரிவு
-நிந்தவூர் நிருபர் எம்.ஜே.எம் ஜூசைல்-
கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற கிராமசேவை உத்தியோகத்தர்களுக்கான போட்டிப் பரீட்சையின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
நாடுபூராவும் சுமார் 2800க்கு மேற்பட்ட கிராமசேவை உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெற்றிடங்களை நிரப்புவதற்கான போட்டிப்பரீட்சையில் தெரிவான பரீட்சார்த்திகளில் நிந்தவூரிலிருந்து பதினான்கு பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் நான்கு ஆண்களும், பத்துப் பெண்களும் அடங்குவர்.
நிந்தவூர் பிரதேச செயலகத்தின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் கிராமசேவை உத்தியோகத்தர்களுக்கான ஏழு வெற்றிடங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி போட்டிப்பரீட்சையில் தெரிவுசெய்யப்பட்டுள்ளவர்களிலிருந்து நேர்முகப் பரீட்சையின் மூலம் வெற்றிடங்களுக்கு நியமிக்கப்படுவார்களென அறியக்கிடக்கிறது.
தெரிவுசெய்யப்படுபவர்களுக்கான நியமனம் எதிர்வரும் 2024 மார்ச் மாதத்தில் வழங்கப்படுமெனத் தெரியவருகிறது.

