கிராமங்களில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரிப்பு

அநுராதபுரம், நொச்சியாகம பிரதேசத்தில் உள்ள சில கிராமங்களில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் கிராம மக்கள் அச்சத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

அநுராதபுரம், நொச்சியாகம பிரதேசத்தில் உள்ள கிம்புல்பெட்டியாவ, குசும்புர, அம்பகஹவெவ மற்றும் கல்கிரியாகம ஆகிய கிராமங்களிலேயே சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

குறித்த சிறுத்தைகளினால் கிராமங்களில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் ஆடுகள், மாடுகள் மற்றும் ஏனைய கால்நடைகள் கொல்லப்பட்டதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்குமாறு கிராம மக்கள் உயர் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்