கிரான் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்
கிரான் நிருபர்
கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டமானது வர்த்தக இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான ச.வியாழேந்திரன் தலைமையில் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாவுவின் வழிநடத்தலின் கீழ் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று புதன்கிழமை ஆம் திகதி நடைபெற்றது.
இவ் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பிரதேச செயலக பிரிவில் 2023 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்பாடுகளும் பரிந்துரைக்கப்பட்டன.
குறிப்பாக கல்வி மற்றும் மகாவலி திட்டம் பிரதேசத்தின் குடி நீர் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பெற்றது.
மேலும் பிரதேச மட்டத்திலான திணைக்களங்களின் பிரச்சினைகள் இனங்காணப்பட்டு அதற்கான தீர்வுகளும் முன்மொழியப்பட்டன.
ஒருங்கினைப்பு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் இனைப்பு செயலாளர் பூ.பிரசாந்தன் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் மற்றும் பதவி நிலை உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள், சமூக மட்ட பிரதிநிதிகளும், கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்