கிண்ணியா மத்திய கல்லூரிக்கு நீர்த்தாங்கி கையளிப்பு

 

திருகோணமலை கிண்ணியா மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் மற்றும் அதிபரின் வேண்டுகோளுக்கமைய திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக்கின் முயற்சியால் ISRC நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட 5000 லீற்றர் நீர்த்தாங்கி  பாடசாலை நிர்வாகத்திடம் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ISRC நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், பாடசாலை நிருவாகம் மற்றும் பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்