கிண்ணியா தளவைத்தியசாலையில் ரம்மிய இல்லம் உளநலப் பிரிவு திறந்து வைப்பு

-கிண்ணியா நிருபர்-

கிண்ணியா தள வைத்தியசாலையில் உளநல சிகிச்சைக்காக, ‘ரம்மிய இல்லம்’ என்ற பெயரில் பிரிவொன்று நேற்று முன் தினம் புதன் கிழமை புதிதாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்தப் பிரிவு கிண்ணியா தள வைத்தியசாலையின், வைத்திய அத்தியட்சகர் டொக்டர் டி.எச். நயானா சந்திரதாசவினால் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் கிண்ணியா தளவைத்தியசாலையின் உளநலப் பிரிவுக்கான பொறுப்பதிகாரி வைத்தியர் ஏ.கே.எம்.நஸ்மி உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்