
கிண்ணியா குறிஞ்சாகேணி ஆற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு –வீடியோ இணைப்பு
-மூதூர் நிருபர்-
கிண்ணியா குறிஞ்சாகேணி ஆற்றில், இன்று வியாழக்கிழமை மாலை குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கிண்ணியா குறிஞ்சாகேணி முதலாம் ஆம் வட்டாரத்தைச் சேர்ந்தவரும், கிண்ணியா மத்திய கல்லூரியில் தரம் ஐந்தில் கல்வி கற்றுவந்த முகமது ரியாஸ் ரம்மி (வயது-10) எனும் மாணவனே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, இன்று மாலை 5.15 மணி அளவில் குறிஞ்சாக்கேணி ஆற்றில் 3 சிறுவர்கள் குளிக்கச் சென்றதாகவும், அதில் இரு சிறுவர்கள் தப்பித்துக் கரையை அடைந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
காணாமல் போன சிறுவனை பிரதேச வாசிகள் சுமார் 45 நிமிடங்கள் தேடுதலின் பின்னர் சடலமாக மீட்டுள்ளனர் , உயிர் இழந்தவரின் சடலம் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.