கிண்ணியா கழிவு முகாமைத்துவ நிலையத்தில் இனந் தெரியாதோரால் தீ வைப்பு
-கிண்ணியா நிருபர்-
கிண்ணியா நகர சபைக்குட்பட்ட கழிவு முகாமைத்துவ நிலையத்தில் இனந் தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளதால் சூழல் மாசடைவு ஏற்படலாம்.
இது தொடர்பில் இதனை செய்தவர்களை இணங்கண்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கிண்ணியா நகர சபை தவிசாளர் எம்.எம்.மஹ்தி தெரிவித்தார்.
இதன்காரணமாக குறித்த கழிவு முகாமைத்துவ நிலையத்தில் இத் தீ சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது.
இது தொடர்பில் நேரடியாக களத்துக்கு விஜயம் செய்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.