கிண்ணியா எழுத்தாளர் பீ.ரீ. அஸீஸின் இலக்கியப் பணியின் பொன் விழா நிகழ்வு

-மூதூர் நிருபர்-

கிண்ணியா சிரேஷ்ட எழுத்தாளர் பீ.ரீ. அஸீஸின் இலக்கியப் பணியின் பொன் விழா நிகழ்வு இன்று ஞாயிற்று கிழமை கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

ஓய்வு பெற்ற நீதிமன்ற பதிவாளர் எம் . எஸ். எம்.நியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில், பொன்விழா மலர் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், முதுமைகள் விளைந்த புதுமைகள் என்ற தலைப்பில் எழுத்தாளர் அஸீஸினால் திறன் நோக்கு செய்யப்பட்ட 50 நூல்களின் தொகுப்பும் இங்கு வெளியிடப்பட்டது.

பொன்னொளி நூலின் ஆய்வுரையை ஓய்வு பெற்ற அதிபர் க. யோகானந்தன் ஆற்றியதோடு, முதுமைகள் விளைந்த புதுமைகள் திறன் நோக்கு நூலின் ஆய்வு உரையை ஆசிரியர் எம்.எச்.எம் மன்சூர் நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில், கிண்ணியா பிரதேச இலக்கிய செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் பொன்னொளி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதன் போது, மூத்த எழுத்தாளர்களால், இலக்கியப் பணியில் பொன்விழா கண்ட பீ.ரீ. அஸீஸ் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

முன்னோடிகள் கலை இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில், தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் எம். ரீ. ஹபிபுல்லாஹ், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் ஏ. சி. எம். முஸ்இல், குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி ஏ. எம். ஏ. அஜீத் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்