கிண்ணியாவுக்கான முன்நகர்வுகள் குறித்து ஆராய்வு

 

கிண்ணியா பிரதேச செயலகத்தில் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர், வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா அவர்களினால் பிரதேச செயலாளர் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் உடனான விசேட சந்திப்புடனான கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

இதன்போது, இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள கிண்ணியாக மக்கள் பற்றியும் கிண்ணியாவை மீள கட்டியெழுப்புவது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், அடுத்தகட்ட முன்னெடுப்புகள் பற்றிய திட்டங்கள் வகுக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கும் ஏற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.