கிண்ணியாவில் யானை தாக்கி மூவர் பலி
-கிண்ணியா நிருபர்-
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஜீத் நகர் பகுதியில் வேளாண்மை காவல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ஒருவர் காட்டு யானை தாக்கியதில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணியா பூவரசந்தீவை சேர்ந்த வெல்லாங்குளத்தில் வசித்து வந்த முஹைதீன் பிச்சை முகம்மது அனிபா (வயது -61) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை வேளாண்மை காவலில் ஈடுபட்ட ஏனைய மூன்று விவசாயிகளும் யானையின் தாக்குதலில் இருந்து தப்பித்துள்ளனர்.
இவ்வாறு மரணமடைந்தவர் 5 பிள்ளைகளின் தந்தை எனவும், அவரது வீட்டிலிருந்து யானையினை துரத்திச் சென்றபோது இரவு 9.00 மணியளவில் யானைத் தாக்குதலுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் சிறு போக நெற்பயிர்ச் செய்கை இடம் பெற்று வருவதனால் அங்கு வருகை தரும் யானைகள் அங்குள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கும் நுழைந்து அச்சுறுத்துவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியில் ஒரு வாரத்திற்குள் 3 பேர் யானைத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்