கிணற்றுக்கு அருகில் குடும்பப் பெண் சடலமாக மீட்பு
-யாழ் நிருபர்-
யாழில் குடும்ப பெண்ணொருவர் நேற்று வியாழக்கிழமை வீட்டில் கிணற்றுக்கு அருகில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கீரிமலை – கூவில் பகுதியைச் சேர்ந்த டேவிட் குணவதி என்ற குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண்ணும் கணவனும் அவர்களது வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் மனைவிக்கு நேற்று சுகயீனம் ஏற்பட்டதால் மாத்திரை வாங்குவதற்காக கணவன் கடைக்கு சென்று வீடு திரும்பிய போது மனைவி தண்ணீர் தொட்டிக்கு அருகில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
இதேவேளை அவரது சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக உடற்கூற்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்