கிணற்றில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு

காலி தர்மபால மாவத்தையில் ஒருவர் நேற்று சனிக்கிழமை இரவு தனது வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குளிப்பதற்குச் சென்று கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

68 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்று இரவு 11.30 மணியளவில் வீட்டில் இருந்து 200 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள கிணற்றில் குளிப்பதற்கு சென்றுள்ளார். ஆனால் நள்ளிரவு 12.00 மணி வரையிலும்  அவர் வீடு திரும்பாததால், குடும்பத்தினர் உறவினர்கள் சென்று ​​கிணற்றில் இருந்த வலையை உடைத்து பார்த்தபோது, 15 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்