கிணற்றில் விழுந்து இரண்டரை வயது குழந்தை உயிரிழப்பு

யாழ்.இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்டஇ இளவாலை- வசந்துபுரம் பகுதியில் இரண்டரை வயதுக் குழந்தை ஒன்று கிணற்றினுள் விழுந்து உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

குழந்தையின் தந்தை வேலைக்கு சென்ற நிலையில் தாயார் சமையல் வேலைகளை செய்து கொண்டிருந்தார்,  இதன்போது அருகில் உள்ள வீட்டு கிணற்றினுள் குழந்தை விழுந்துள்ளது.

குழந்தை மீட்கப்பட்டு தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை, குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

கருணாநிதி ரக்ஸிகா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்