
கிணற்றில் தவறி விழுந்து சிறுமி மரணம்
யாழ்ப்பாணம், இளவாலை வசந்தபுரம் பிரதேசத்தில் வீட்டுத் தோட்டத்தில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றுக்குள் விழுந்து இரண்டரை வயது சிறுமி மரணம்.
இரண்டரை வயதான கருணாநிதி ரக்ஷிகா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி வீட்டுத்தோட்டத்துக்குள் சென்று, கிணற்றுக்கு அடியில் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அதனை தாயும் அவதானித்துள்ளார்.
எனினும், தாய் அசட்டையாக இருந்துவிட்டார். திடீரென ஏதோவொரு சத்தம் கேட்டதை அடுத்து கிணற்றடிக்கு ஓடோடிச் சென்ற தாய், கிணற்றுக்குள் குழந்தை கிடப்பதை கண்டு, அபாய குரல் எழுப்பி உதவிக்காக அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார்.
அவர்களின் உதவியுடன் சிறுமியை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோதிலும், சிறுமி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
பெற்றோரின் கவனயீனம் காரணமாக இந்த உயிரிழப்பு இடம்பெற்றுள்ளதா பொலிஸ் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
