
கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட ஆசிரியரின் சடலம்
வவுனியா – நெளுக்குளம் பாலாமைக்கல் பகுதியில் ஆசிரியர் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக இன்று செவ்வாய் கிழமை காலை மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் கடமையாற்றிய தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த வீதியூடாகப் பயணித்த பிரதேசவாசிகள் சிலர் நெளுக்குளம் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் மீட்கப்பட்ட கிணற்றுக்கு அருகில் குறித்த ஆசிரியரின் துவிச்சக்கர வண்டி, பாதணிகள் மற்றும் குடை என்பனவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
