கிணற்றிலிருந்து சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

அதே பகுதியைச் சேர்ந்த தெய்வேந்திரன் தேவராஜா (வயது 45) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலத்தின் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்