காஸா போர் ஒப்பந்தத்தின் ஹமாஸ் பரிந்துரை

காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டத்தின் போது, அனைத்து இஸ்ரேலிய கைதிகளையும் பாலஸ்தீன கைதிகளையும் ஒரே நேரத்தில் பரிமாற்றிக் கொள்வதற்கு ஹமாஸ் பரிந்துரைத்துள்ளது.

போர் நிறுத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதையும் இஸ்ரேலியர்களை முழுமையாக வெளியேற்றுவதையும் நோக்கமாகக் கொண்டு ஹமாஸ் இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சனிக்கிழமை விடுவிக்கப்படவுள்ள 6 பணயக் கைதிகளையும் விடுவிப்பதனை பாலஸ்தீன குழுவான ஹமாஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

இதனிடையேஇ காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டம் இந்த வாரம் அமுலாகும் என இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சர் கிடியோன் தெரிவித்துள்ளார்.